முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Black Creek பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

574

ரொரன்ரோ Black Creek குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை வேளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Shoreham Drive மற்றும் Shoreham Court பகுதியில், நள்ளிரவு தாண்டிய வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து காவல்துறையினரும் அவசர மருத்துவப் பிரிவினரும் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கு ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுய நினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட துப்பர்ககிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனை காவல்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவரது வயது பெயர் உள்ளிட்ட விபரங்களோ, சந்தேக நபர் குறித்த விபரங்களோ காவல்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகே, Driftwood Avenue மற்றும் Jane Street பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்று 24 மணி நேரங்களுக்குள் அதே பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *