BREAKING NEWS
murder135-05-1507197330

Humber Summit பகுதியில் 19 வயது பெண் ஒருவர் ஆண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்

36

வீடு ஒன்றின் கதவினை உடைத்து உள்ளே நுளைந்த 19 வயது பெண் ஒருவர், அங்கிருந்த ஆண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் இன்று அதிகாலை வேளையில் ரொரன்ரோ Humber Summit பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Ardwick Boulevard மற்றும் Finch Avenue பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில், இன்று அதிகாலை 3.15 அளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

கத்திக் குத்தினை மேற்கெர்ணட பெண் தொடர்பிலான அடையாளம் தங்களுக்கு தெரியும் என்ற போதிலும், அதனை தற்போதைக்கு வெளியிடவில்லை எனவும், கத்திக் குத்துக்கு இலக்கானவர் அந்த பெண்ணின் ஆண் நண்பர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்னர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *