BREAKING NEWS
180329-toddler-killed-gun-shots-feature

Woodbridge பகுதியில் வைத்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

149

இன்று அதிகாலை வேளையில் Woodbridge பகுதியில் வைத்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை 27 மற்றும் Martin Grove வீதிப் பகுதியில், இன்று அதிகாலை 12.45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட SUV ரக வாகனம் ஒன்றினுள், குறித்த அந்த இருவரும் துப்பர்ககிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இந்த வாகனத்தின் யன்னல் கண்ணாடிகள் சிதறுண்டு கிடப்பதாக அங்கு விசாரணைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அந்த பகுதியில் உள்ளவர்களிடமும், அருகே உள்ள குடிமனைகளிலும் தகவல்களைச் சேகரித்துவரும் காவல்துறையினர், தம்மிடம் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களைத் தந்துதவுமாறும் அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட இருவருமே பெரியவர்கள் என்ற கூறப்பட்டுள்ள போதிலும், அவர்களது பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் எவையும் காவல்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவிலலை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *