முக்கிய செய்திகள்

அடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

504

அடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, குழு ஒன்றை நிறுவியிருந்தார்.

இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

நாட்டில் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கை கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

விசேடமாக புலனாய்வுத் துறையைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டில் புலனாய்வுத் துறை குறித்து எமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக தெரியப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என தாம் கருதுவதாக கோதபாய தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *