முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதனை கனேடிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்

460

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தலிலும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

மொன்றியலில், தான் தெரிவான தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சி நிகழ்வு ஒன்றில் வைத்து பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தனது ஆதரவாளர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், நேர்மறையான அரசியல் என்ற தமது சித்தாந்தத்தை இன்னமும் பலமாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தல், பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தினை அதிகரித்தல், கனேடிய சமுத்திரங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட உறுதிமொழிகளையும் இதன்போது அவர் வழங்கியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *