முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டு கனடாவின் 150ஆவது பிறந்தநாள் நிகழ்வை உலகப் பிரசித்திபெறும் வகையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஒட்டாவா மேற்கொண்டு வருகிறது

1317

கனடா தனது 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், அதனை உலகப் பிரசித்தி பெறும் வகையில், பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொண்டு வருவதாக ஒட்டாவா தெரிவித்துள்ளது.

“ஒட்டாவா 2017” என்ற தலைப்பிலான இந்த நிகழ்வு குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்துள்ள ஒட்டாவா நகரபிதா ஜிம் வாட்சன், கனேடிய தலைநகரின் சிற்பினை பறைசாற்றுவதற்கான ஒரு படிக்கல்லாக இந்த நிழகழ்வு அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் 2017 பாரம்பரிய புத்தாண்டு விடியலின் வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமாகவுள்ள கொண்டாட்டங்கள், 2017ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாகாணங்களில் உள்ள நகரங்களும் நாட்டின் பிறந்த நாளை பல்வேறு வகையில் கொண்டாட திட்டமிட்டு்ளள நிலையில், அனைத்துக்கும் முத்தாய்ப்பாகவும், அனைத்துக்கும் ஒரு படி மேலாகவும் தலைநகரின் கொண்டாட்ட நிகழ்வுகள் அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆண்டு முழுவதுக்கும் ஒட்டாவாவில் கொண்டாட்டங்களுக்கும் விருந்துபசாரங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், யூலை மாதத்தின் ஐந்து நாட்களுக்கு மிகப் பிரமாண்டமான நிகழ்வுக்ள ஒட்டாவாவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *