1.9 மில்லியன் மருத்தளவுள்ள கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வார இதறுதிக்குள் கனடாவை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, தேசிய தடுப்பூசி விநியோக செயற்றிடத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாரமென்றுக்கு 3.1மில்லியன் தடுப்பூசிகளை நிருவகிக்க வேண்டிய நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அடுத்துவரும் காலத்தில் தடைகளின்றி தடுப்பூசி விநியோகம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
இதனால் மூன்றாவது அலையின் சவால்களை முறியடிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.