அணுவாயுதங்களை கைவிடுமாறு கனேடிய அரசாங்கம், வடகொரிய அரசாங்கத்திடம் இரகசியமான முறையில் கோரிக்கை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

371

அணுவாயுதங்களை கைவிடுமாறு கனேடிய அரசாங்கம், வடகொரிய அரசாங்கத்திடம் இரகசியமான முறையில் கோரிக்கை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்டோவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குரு ஹெய்ய்ன் சூ லிம் (Hyeon Soo Lim) ஐ வடகொரியா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது, கனடா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

வடகொரியாவுடன் கனடாவிற்கு எவ்வித இராஜதந்திர அதிகாரபூர்வ உறவுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மதகுருவினை விடுவிக்கும் நோக்கில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடிய ராஜதந்திரிகள், அணுவாயுதக் களைவு குறித்தும் பேசியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *