முக்கிய செய்திகள்

அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் கனடா பட்டியலிடப்பட்டுள்ளது

423

உலகிலேயே அதிக பணம் படைத்தவர்களைக் கொண்ட நாடுகளில் ஐந்தாம் இடத்தினை கனடா பெற்றுள்ளது.

Wealth X என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தது 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்தினைக் கொண்டவர்களின் எண்ணிக்கைகளைக் கணக்கிடும் போது, உலகிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட 5ஆவது நாடாக கனடா விளங்குவதாக Wealth X நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 10 ஆயிரத்து 840 குடியிருப்பாளர்கள், 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளின் குடியிருப்பாளர்கள் சொத்துக் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் ஒப்பிட்டு பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்விற்கிணங்க, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

தரப்படுத்தலில் கனடாவிற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஹொங்கொங், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *