முக்கிய செய்திகள்

அதிபர் டிரம்பின் அவசரநிலை பிரகடனத்தை ரத்து செய்யும் தீர்மானம் மீது நாளை வாகெடுப்பு

325

அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்க டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தினார். அதிபர் அதிபரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்யும் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

மெக்சிகோ எல்லை வழியாக நடக்கும் சட்டவிரோத குடியேற்றம், போதை மருந்து, ஆள் கடத்தல்கள் ஆகியவற்றை தடுக்க எல்லையில் பலம் வாய்ந்த சுவர் கட்ட அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த எல்லை சுவர் அதிபர் டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

எல்லைச் சுவர் கட்டுவதற்காக அதிபர் டிரம்ப் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்திடம் கோரினார். ஆனால் நாடாளுமன்றத்தின்  எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதிபர் டிரம்ப் பலமுறை வலியுறுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் எதிக்கட்சியினர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாக கடந்த வாரம் அதிபர் டிரம்ப் அவசரநிலை பிரகடனப்படுத்தினார். அதன் மூலம் நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் அதிபர் சுயேட்சியாக தன் முடிவை அமல்படுத்த முடியும்.

அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். டிரம்பின் அவசர நிலை பிரகடனம் சட்டத்திற்கு புறம்பானது என குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் அதிபர் டிரம்பின் அவசரநிலை பிரகடனத்தை ரத்து செய்யும் தீர்மானம் மீது நாளை பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

அதிபரின் ஆணையை ரத்து செய்யும் இந்த தீர்மானத்திற்கு சபையில் உள்ள மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ளனர். எனவே இந்த தீர்மானம் எளிதாக நிறைவேறும்.

அதன்பின் இந்த தீர்மானம் மேல் சபையான செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். செனட் சபையில் டிரம்பின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே அங்கு இந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.

ஒருவேளை ஆளுங்கட்சியினர் சிலர் டிரம்புக்கு எதிராக தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

ஒருவேளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதை நிராகரித்துவிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *