சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தனது வாகனத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் காவல்துறை ஆணையரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலா தமிழகம் வரவுள்ள நிலையிலேயே, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக, அமைச்சர்களால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில், கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே வரும் 7ஆம் திகதி காலையில் தமிழகம் நோக்கி புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சசிகலாவின் பயணம், மறுநாள், 8ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.