கூட்டணிக்காக அதிமுகவின் பின்னால் செல்லவில்லை, அதிமுக தான் தேமுதிகவுக்குப் பின்னால் வருகிறது என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
ஆரணியில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“கூட்டணிக்காக அதிமுக தான் நம்மை கெஞ்சுகிறது. நாம் அவர்களை கெஞ்சவில்லை.
தேமுதிக எந்த கூட்டணியில் சேர்கிறதோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்.
2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால், அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது.
எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என பல கட்சிகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக – தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீசின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.