முக்கிய செய்திகள்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் குற்றவாளி; விழுப்புரம் நீதிமன்றத்தினால் தீர்ப்பபு

16

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் குற்றவாளி என விழுப்புரம் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

1991 மற்றும்  1996ஆம் ஆண்டுகளில் மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், சின்ன சேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரமசிவம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறையினால்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்பை விசாரித்த  விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், பரமசிவம் குற்றவாளி என்றும்,  அவருக்கு  4 ஆண்டு சிறை தண்டனையும், 33 இலட்சம் ரூபா அபராதமும் விதிப்பதாகவும், இன்று தீர்ப்பளித்துள்ளது.

அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைதண்டனை நீடிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் அவர் தனது மகன்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் முழுவதும் அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *