ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள 27 பகுதிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீளத்திறப்பதற்குரிய பொறிமுறைகள் அறிவிக்கப்படவுள்ளன.
வர்ண அடிப்படையிலான உறுதிப்படுத்தலின் பின்னரேயே வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று அவ்வாறான பகுதிகளில் அத்தியாவசயமற்ற வணிகங்களையும் மீளத் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் நயாகரா பகுதி சாம்பல் நிறத்தினைக் கொண்டிருப்பதால் அப்பகுதியல் 25சதவீத வணிக நிலையங்களை மீளத்திறப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது.
அதேநேரம், ரொராண்டோ, பீல் பிராந்தியம், யோர்க் பிராந்தியம் மற்றும் நோர்த் பே மற்றும் பாரி சவுண்ட் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு அமுலில் இருக்கவுள்ளது.