யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நான்கு இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், காரை நகர் கடற்படைத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.