ஒன்ராரியோவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனைய துறைகளை மீளத்திறப்பதற்கு முன்னதாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஒன்ராரியோ அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்ராரியோ சுகாதார அதிகாரிகள் கவுன்சிலின் தலைவர் வைத்தியர் போல் ரூமெலியோடிஸ் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் ஆகியோருக்கு இதுதொடர்பில் உத்தியோக பூர்வமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.
சமூகக் கட்டுப்பாடுகள் நீங்குவதற்கு முன்னதாகவே பாடசாலைகள் மீளத் திறக்கப்படுவது அவசியமானது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.