அனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பணியகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது ஐக்கிய நாடுகளுக்கான இந்திய முதன்மை செயலரும் சட்ட ஆலோசகருமான எட்லா உமா சங்கர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தெற்காசியா முழுவதும் அல் கய்தா, தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீவிரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் ஆதரவும் நிதியுதவியும் அளித்து வருகின்றன என்றும், தீவிரவாதம் அனத்துலக நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும் அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு தஞ்சமளித்து ஆதரவளிப்பவர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பகிரங்கப்படுத்த அனைத்துலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய முதன்மை செயலரான எட்லா உமா சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.