முக்கிய செய்திகள்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்

370

குற்றம் இழைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பேரில் சிறையில் இருபவர்களாக இருக்கலாம் என்ற பொதிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காலம் தாழ்த்தியேனும் இந்த காரியாலயம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும், காரியாலயம் உருவாக்கப்பட்டு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், இழப்பீடுகள் மற்றும் மீண்டும் இவை இடம்பெறாமை என்பன நிலைமாறு பொறிமுறையின் அம்சங்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியம் பெறுகின்றது எனவும், இந்த சட்டமூலம் வரவேற்கத்தக்க விடயமே என்ற போதிலும், இது நீதியை புறக்கணிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீடுகள் குறித்த காரியாலயம் மூலமாகவேனும் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *