அன்கரேஜி பனி மலையில் உலங்கு வானூர்தி மோதி விபத்து

19

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அன்கரேஜில் (Anchorage)  உள்ள பனி மலையில் உலங்கு வானூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான செக் குடியரசை சேர்ந்த பெட்ர் கெல்னர் (Petr Kellner)  உட்பட 3 சுற்றுலா பயணிகள்,  உலங்குவானூர்தியில், பனிமலைகளை சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டு சென்ற  போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உலங்குவானூர்தி பனிப்பாறை மீது மோதி நொருங்கியதாகவும், இந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த கெல்னர் (Petr Kellner)   2020ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில்  உலகின் 68 ஆவது பணக்காரராக இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *