சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பாக அமமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளன.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக இன்று, அம்முகவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது.
எனினும். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அமமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறுத்தி விட்டு, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய வைக்க மாட்டோம் என்று கடலூரில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம், இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.