அமெரிக்காவின் நான்கு இடங்களில் துப்பாக்கிச்சூடு;8பேர் பலி

37

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஸ்பா எனப்படும், உடற்பிடிப்பு நிலையங்களிலேயே இடம்பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஜோர்ஜியாவின் தலைநகரான, அட்லாண்டாவின் புறநகர் பகுதியில்,  உள்ள  உடற்பிடிப்பு நிலையத்துக்குள் புகுந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மற்றொரு உடற்பிடிப்பு நிலையத்தில், நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அட்லாண்டாவில் மற்றொரு பகுதியில்,  இரண்டு உடற்பிடிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு பேரும், உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையினர் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய இளைஞனை கைது செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் மேலும்  பலர் காயம் அடைந்துள்ளனர் என்றும் உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆசிய நாட்டை சேர்ந்த பெண்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *