முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் பைடன்

31

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக,  ஜோ பைடன், இன்று பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க நேரப்படி, இன்று பகல் 12:00 மணிக்கு, நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மணிகூண்டில் ஒலி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, அப்போது ஜோ பைடனுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் றொபேர்ட்ஸ் (John Roberts)  பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

தனது குடும்பத்தின் 127 ஆண்டுபழைமையான பைபிளின் மீது உறுதி ஏற்று அவர் பதவியேற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 49வது துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வுக்குப்  பின்னர், முப்படைகளின் அதிகாரத்தை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் வகையில், ராணுவ அணிவகுப்பு இடம்பெற்றதுடன்,  ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் ஜோ பைடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் ராணுவ பாதுகாப்புடன் வெள்ளை மாளிகைக்கு ஜோ பைடன் பேரணியாக அழைத்து செல்லப்பட்டார்.

ஜோ பைடனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *