அமெரிக்காவிலும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

55

அமெரிக்காவிலும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 717ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளாதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதவிர அமெரிக்காவின் 36 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நியூயோர்க், கலிபோர்னியா, ஒரேகான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழு தலைவரும் வடக்கு கரோலினா பிரதிநிதியுமான மார்க் மீடோஸ் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் அவர் தொடர்பில் இருந்ததால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை வரை அவர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *