அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியவை

30

அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியவை என்று கனடிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (ERIN O TOOLE)தெரிவித்துள்ளார்.

தனது கீச்சகப்பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ள அவர், ஜனநாயக பண்புகள் மீறப்படுகின்றமையானது மக்கள் ஆணையை மறுதலிக்கும் செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பசுமைக்கட்சியின் தலைவர், அன்னமி போலும் (Annamie Paul) இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் என்.டி.பி.கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், (Jagmeet Singh)  டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் நோக்கி ஆசையின் விளைவாலேயே வொசிங்டன் பற்றி எரிகின்றது என்று கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் அமெரிக்காவின் ஜனநாயகத்தினை மதிக்கும் பண்புகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது என்றார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *