முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் இலகு ரக விமானம் விபத்து

45

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் (Arkansas ) மாநிலத்தில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம், வெள்ளிக்கிழமை நான்கு பேருடன் ஓக்லஹோமா விமான நிலையத்தில் இருந்து வடக்கு புளோரிடாவில் உள்ள வில்லிஸ்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றிருந்தது.

அன்று மாலை 5 மணியளவில், ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ரொக் அருகே சென்ற போது கதூவி திரையில் இருந்து மறைந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்றன.

இதன்போது, விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது, அந்த விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *