முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் உயிரிழப்பு 6 இலட்சத்தினை எட்டும்; ஜோ பைடன்

67

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு 6 இலட்சத்தை எட்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில்  செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட ஜோ பைடன்,

“ நாட்டில் கொரோனாவால் ஏற்கனவே 4 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 இலட்சத்தை எட்டும்.

மக்கள் பசியால் பாதிக்கப்படலாம். வேலை இழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம். நாம் உடனடியாக செயற்பட வேண்டும்.

தேசிய அவசரநிலையில் உள்ளது போல நாம் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *