முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்கு எச்-4 வீசாவில் செல்பவர்களுக்கு பணியாற்ற அனுமதி; ஜோ பைடன்

24

அமெரிக்காவுக்கு எச்-4 வீசா அனுமதி மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு எச்-1 பி விசாவில் சென்று பணியாற்றும், வெளிநாட்டவர்களின் மனைவி அல்லது கணவன் ஆகியோருக்கு எச்-4 வீசா அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எச்-4 வீசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு, ஒபாமா ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட அனுமதியை,  ட்ரம்ப் பதவியேற்றதும் ரத்துச் செய்திருந்தார்.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், இந்த இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *