முக்கிய செய்திகள்

அமெரிக்காவுடனான அணுவாயுதங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நேரிடலாம் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

321

அணுவாயுத களைவு தொடர்பில் அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்படலாம் என்று வட கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் ச்சோ சன் ஹூய் (Choe Son Hui) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

வியட்னாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ள முடியாது போனமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என வடகொரியா கூறுவதில் உண்மையில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *