அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், முக்கிய எலலை நகரான வின்ட்சருக்கு (Windsor) இன்று கனேடிய பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

480

பிரதமர் ஜஸ்டின் ரூடோ, மிகவும் பரபரப்பு மிக்க அமெரிக்காவுடனான முக்கிய எல்லை நகரான வின்ட்சருக்கு(Windsor) இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவுடன் நீண்ட கால இழுபறியில் இருந்து வந்த வர்த்தக பேச்சுவார்த்தையின் நிறைவாக, NAFTAவுக்கு பதிலீடான புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுடனான எல்லை நகருக்கு பிரதமர் மேற்கொள்ளும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

இன்று முழுவதும் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள அவர், அங்குள்ள தொழிற்சங்க தலைவர்களைச் சந்திக்கவுள்ளதுடன், வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் செல்லவுள்ளார்.

அதற்கு முன்னதாக இன்று காலையில் அவர், எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் திறக்கப்படவுள்ள, Detroit ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படும், Gordie Howe பாலம் தொடர்பிலான அறிவிப்பு ஒன்றினையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

வின்ட்சருக்கும் Detroitற்கும் இடைப்பட்ட இந்த எல்லைக் கடவையின் ஊடாகவே கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் பொருட்களில் நான்கில் ஒரு பங்கு எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *