முக்கிய செய்திகள்

அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன

394

அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன.

சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களது உரையாடல் சுமுகமாக இருந்ததாக தமது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மாதத்தின் இறுதியில் அர்ஜெண்டினாவில் நடைபெறும் G20 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாட்டிற்கிடையே சந்திப்பது குறித்தும் இருவரும் திட்டமிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இருதரப்பு வர்த்தகப் பதற்றத்தால், தொழிற்துறை பாதிக்கப்படுவதை அதிபர் ஸி ஜின்பிங் விரும்பவில்லை என்று சீன அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம், அதன் தைவானியப் பங்காளித்துவ நிறுவனம், சில தனி நபர்கள் ஆகிய தரப்புகள், அமெரிக்காவின் Micron Technology நிறுவனத்தின் வர்த்தக இரகசியங்களைத் திருடியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *