அமெரிக்க அரசாங்கத்திற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகநூல் நிறுவனம் அந்தரங்க தகவல்களை கசிய விட்டமை தொடர்பில் பாரியளவு தொகையை நட்டஈடாக செலுத்த நேரிட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழு மற்றும் முகநூல் நிறுவனம் என்பன இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகநூல் நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு பகுதியில் 16.9 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளதுடன் அதில் 6.9 பில்லியன் லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.
87 மில்லியன் பயனர்களின் அந்தரங்க தகவல்களை முகநூல் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் கசியவிட்டமை தொடர்பில் பாரியளவிலான அபராதத் தொகை ஒன்றை செலுத்த நேரிடும், அந்த அபராதத் தொகையை குறைத்து செலுத்துவதற்கான முனைப்பில் முகநூல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கத்திற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு…
Feb 15, 2019, 12:33 pm
277
Previous Postபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு
Next Postஇலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம் என்பன தொடர்பான நடவடிக்கைளில் நெருங்கிப் பணியாற்றுவதற்கு இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளன.