அமெரிக்க இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கினை இரத்து செய்தது சீனா

47

சீன வெளியுறவு அமைச்சகம் ஹொங்கொங் மற்றும் சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள மக்காவ் ஆகிய இடங்களுக்கு வருகை தரும் அமெரிக்க இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு  விசா விலக்கினை இரத்து செய்துள்ளது.

இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதிலும், கடந்த மாதம் ஹொங்கொங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பீஜிங் தகுதி நீக்கம் செய்வதிலும் 14 சீன அதிகாரிகளின் தொடர்பு காரணமாக அமெரிக்கா அவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் பயணத் தடைகளையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *