முக்கிய செய்திகள்

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி இலங்கையில்

536

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், கடந்த 20ஆம் நாள் தமது கீச்சகப் பக்கத்தில், ஜெனரல் ரொபேர்ட் பிறவுணை இலங்கைவுக்கு வரவேற்கிறோம் என்று பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கண்ணிவெடி அகற்றல், அனைத்துலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற, இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்காக ஜெனரல் பிறவுண் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அவரது சந்திப்புகள், நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *