ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்க – சீன உயர்மட்ட அதிகாரிகள் நேருக்கு நேர் பேச்சு நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கரேஜ் (Anchorage) நகரில் நடந்த இந்தச் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்ரனி பிளிங்கன் (antony blinken) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் (Jake Sullivan) ஆகியோரும், சீனாவின் வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சி (Yang Jiechi) மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் இது ஒரு மோசமான பேச்சுவார்த்தையாகவே அமைந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.