முக்கிய செய்திகள்

அமெரிக்க தேர்தல் மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிக்கைகளுக்கு புலிட்சர் விருதுகள்

1245

பத்திரிகை, இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களிப்பு செய்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு, ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையே இருந்த தொடர்பை கண்டறிய புலன் விசாரணையில் ஈடுபட்ட பல தகவல்களை வெளியிட்ட வாஷிங்டன்போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தி பிரஸ் டெமோகிரட்டுக்கு, கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு காட்டு தீ தொடர்பான பிரேங்கிங் நியூஸ்களை வெளியிட்டதற்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்சென்ட் மீது அளிக்கபட்ட பாலியல் புகார் செய்திகளை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்கர் இதழ்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அலபாமா ஊடகத்துறையின் கட்டுரையாளர் ஜான் அர்ஜிபல்ட், வெர்ஜினியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர் கேன் வில்லி ஆகியோரருக்கு புலிட்சர் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகளை சிறப்பாக வெளியிட்டதற்காக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இசைப் பிரிவில் அமெரிக்க பாடகர் ஹென்ரி லாபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருதின் வரலாறு

அமெரிக்காவில் நாளிதழ் நடத்தியவர் ஜோஸப் புலிட்சர். ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் அவர். உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்தவர் பத்திரிகையாளராக ஆனார். பின்னர் செயின்ட் லூயி போஸ்ட்-டிஸ்பாட்ச், த நியூயார்க் வேர்ல்டு ஆகிய பத்திரிகைகளின் அதிபர் ஆனார்.

புலிட்சர் தனது மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு இதழியல் கல்லூரி தொடங்கவும் அவரின் பெயரால் விருதுகள் வழங்கவும் தேவையான நிதியை ஒதுக்கி உயில் எழுதினார். அவர் மறைந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ம் ஆண்டில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது.

முதலில், பத்திரிகைத் துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலும் பல துறைகளுக்கு விருதுகள் விரிவுபடுத்தப்பட்டன. தற்போது மொத்தம் 21 பிரிவுகளில் விருதுகளும், ஐந்து பிரிவுகளில் ஆய்வு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *