அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை அவமானகரமானவை

40

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை அவமானகரமானவை என பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (BORIS JOHNSAN) தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு ஆதரவான நாடு அங்கு அமைதியான விதத்தில் உரிய முறையில் அதிகார மாற்றம் இடம்பெறுவது முக்கியம் எனவும் பொறிஸ் ஜோன்சன் (BORIS JOHNSAN) குறிப்பிட்டுள்ளார்.

வோசிங்டனில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களின் தலைவர் சார்லெஸ் மைக்கல் (Charles Michael) அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் ஜனநாயகத்தின் ஆலயம் என தெரிவித்துள்ள அவர் ஜோ பைடனிடம் அதிகாரத்தை அமைதியான முறையில் அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க நாடளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை ஜனநாயகத்தின் எதிரிகள் வரவேற்பார்கள் என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் (Haiko Mass) தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *