முக்கிய செய்திகள்

அமெரிக்க படையினர் சோமாலியாவை விட்டு, வெளியேற்றம்

27

பெரும்பாலும் எல்லா அமெரிக்க படையினரும், இன்றுடன் சோமாலியாவை விட்டு, வெளியேறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் இருந்து வெளியேற்றப்படும் 700 பேர் கொண்ட வலுவான இராணுவ அணி எங்கு நிலை நிறுத்தப்படும் என்பது குறித்து அமெரிக்க இராணுவம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும், சோமாலியாவுடனான அதன் அர்ப்பணிப்பு குறையாமல் இருக்கும் என்றும் இஸ்லாமிய போராளிக்குழுவான அல்-ஷபாப்பின்(al-Shabab)  நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

2007ஆம் ஆண்டில் சோமாலியாவில் அமெரிக்கா இராணுவ ரீதியான தலையீட்டை மேற்கொண்டிருந்தது.

அங்குள்ள இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை அமெரிக்க இராணுவத்தினர் முக்கியமான பணியாக மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், தொடர்ச்சியான வான் தாக்குதல்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியும், வான்வழித் தரையிறக்கத்தின் மூலமும், அல்- ஷபாப் (al-Shabab) தலைவர்கள் பலரை அமெரிக்காவின் சிறப்புப் படைகள் கொன்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *