அமெரிக்க பத்திரிகையாளர் டானியல் பேர்ளை (Daniel Pearl) கடத்தி படுகொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை பாக்கிஸ்தான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
WALLSTREET JOURNALஇன் தென்னாசிய பணியகத்தின் தலைவராக பணியாற்றிக்கொண்டிருந்த டானியல் பேர்ள் (Daniel Pearl) சப்பாத்து குண்டுதாரி என அழைக்கப்படும் பிரிட்டனின் ரிச்சட் ரீட் (RICHED TREED) குறித்து செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை 2002இல் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
டானியல் பேர்ள் (Daniel Pearl) கொல்லப்படுவதை படமெடுத்த பயங்கரவாதிகள் அமெரிக்க அதிகாரிகளிற்கு அனுப்பிவைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு தண்டனை நிரூபிக்கப்பட்ட நால்வரும் 18 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில் குறிப்பிட்ட ஈடுசெய்ய முடியாத பாதிப்பையும் தீமையையும் அனுபவித்தனர் என்று நீதிமன்றம் தெரிவித்து அவர்களுக்கான விடுதலைக்கு அனுமதி அளித்துள்ளது.