முக்கிய செய்திகள்

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் லொய்ட்;செனட் சபை ஒப்புதல்

273

அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் லொய்ட் ஒஸ்டினை (lloyd Austin) நியமிப்பதற்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதியாக  பொறுப்பேற்றுள்ள, ஜோ பைடன்,  பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் லொய்ட் ஒஸ்டினின் (lloyd Austin) பெயரை முன்மொழிந்திருந்தார்.

இவரது நியமனம் தொடர்பாக, செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்,  ஆதரவாக 93 உறுப்பினர்களும், எதிராக 2 பேரும் வாக்களித்துள்ளனர்.

செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், ஜெனரல் ஒஸ்டின், விரைவில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் முன்னிலையில் பாதுகாப்பு செயலாளராக பதவி ஏற்கவுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஜெனரல் லொய்ட் ஒஸ்டின் பெறவுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *