முக்கிய செய்திகள்

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும்

604

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் பேச்சுக்களை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக12 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டடியுள்ளமை எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.

அந்த குற்றச்சாட்டுகள் சதித்திட்டங்களின் குவியல் என்றும் , திங்களன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் சூழலை கெடுக்கும் நோக்கத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 அதிகாரிகள் அமெரிக்க தேர்தலில் தலையிட்டனர் என்பதற்கான ஆதரங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அமெரிக்காவின் மூத்த சனநாயகக் கட்சி பிரமுகர்கள் சிலர் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்குமாறு கோரியுள்ளனர்.

எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் தலையிடுவதில்லை என்பதை நிரூபிக்க ரஷ்யா நம்பகமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை நடைபெறக்கூடாது என்று சனநாயகக்கட்சியின் செனட் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.

புட்டினை பொறுப்பாளியாக கருத டிரம்ப் தயாராகும் வரை பேச்சுவார்த்தை நடைபெறக் கூடாது என்று குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் ஜான் மெக்கைன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஊடகவிலாளரிடம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *