முக்கிய செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் காலமானார்

575

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94வயதில் காலமானார்.

நேற்று வெள்ளிக்கிழமை ரெக்ஸசில் (Texas) உள்ள அவரின் வீட்டில் இரவு 10மணி 10 நிமிடமளவில் அவரின் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமான இந்த செய்தியை அவரின் மகனும், மற்றொரு முன்னாள் அமெரிக்க அதிபருமான ஜார்ஜ் டபிள்யூ. புஷ் வெளியிட்டுள்ளார்.

ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் அமெரிக்காவின் அதிபராக கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர்.

அதற்கு முன்னதாக ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த 1981ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரையான 8 ஆண்டு காலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், 2001ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை இரண்டு தவணைகள் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *