முக்கிய செய்திகள்

அமெரிக்க வரலாற்றிலேயே அரசியல் அவதூறு பிரசாரங்களால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

1453

அமெரிக்க வரலாற்றிலேயே அநியாயமான அரசியல் அவதூறு பிரசாரங்களால்  பெரிதும் பாதிக்கப்பட்டவர் தாமே என்று குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பல பெண்கள்  மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் பொய்யானவை என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்தத் தேர்தல் பல்வேறு தில்லு முல்லுகள் நிறைந்தது என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டிரம்பின் வழக்கறிஞர் குழு அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’இற்கு எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ்’, ட்ரம்புக்கு எதிராக 2 பெண்கள் அளித்த பேட்டியை அண்மையில் செய்தியாக வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிக்கையை டிரம்பின் வழக்கறிஞர் குழு அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிவிக்கையில் டிரம்பிற்கு எதிரான செய்தியை நாளிதழின் இணையத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளதுடன், அவ்வாறு செய்யாது விடின் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே  தாங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், 2 பெண்களின் குற்றச்சாட்டுகளை மட்டுமன்றி, ட்ரம்பின் மறுப்பையும் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள ‘நியூயார்க் டைம்ஸ்’ ஊடகத்தின் சட்ட ஆலோசகர் டேவிட் மெக்ரோ, டிரம்பின் வழக்கறிஞர் குழுவுக்கு பதில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் குறித்த செய்தியை வெளியிட்டதற்காக வருத்தமோ, மன்னிப்போ கோர முடியாது என்றும், அந்த செய்தியை திரும்ப பெறவோ, இணையத்தில் இருந்து நீக்கவோ முடியாது என்றும் அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *