முக்கிய செய்திகள்

அமெ.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை அண்மித்தது20

40

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை நெருங்குகின்றது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் இரண்டு கோடியே 97இலட்சத்து 44ஆயிரத்து 652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பில் அதிக பாதிப்பை சந்தித்த முதல்நாடாக விளக்கும் அமெரிக்காவில், இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 38ஆயிரத்து 628பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 45ஆயிரத்து 116பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 788பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 87இலட்சத்து 56ஆயிரத்து 390பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12ஆயிரத்து 882பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு கோடியே நான்கு இலட்சத்து 49ஆயிரத்து 634பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *