அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கெதிராக கிளம்பியது எதிர்ப்பு (கடித பிரதி உள்ளே)

46

மியன்மாரின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் வுன்னா முவாங் எல்வினுக்கு (Wunna Mwang Elwin) சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்திற்கு மியன்மார் பிரஜைகள் சமூக ஊடகங்களில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

#ProtestSriLanka, #ProtestBIMSTEC எனும் ஹாஷ் டெக் மூலம், அவர்கள் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் சதித் திட்டத்தை நடத்தி மியன்மார் இராணுவம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் பின்னர் மியான்மாரின் வெளிவிவகார அமைச்சராக வுன்னா முவாங் எல்வின் (Wunna Mwang Elwin) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, 2021 மார்ச் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு மூத்த அதிகாரிகள் கூட்டத்திலும், ஏப்ரல் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள (BIMSTEC) பல் துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த கடிதம், வுன்னா முவாங் எல்வினை (Wunna Mwang Elwin) அங்கீகரிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்தும், கடிதத்தை மீள பெற கோரியும், தாம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியும் மியன்மார் பிரஜைகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு சிறிலங்கா, மியன்மார் இராணுவத்தை ஆதரிக்கும் வகையில் செயற்படுவதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே மியன்மார் பிரஜைகள் சிறிலங்காவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனினும், அமைச்சரின் கடிதம் சாதாரணமானது என சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் கலாநிதி ஜயனாத் கொலம்பகே, தெரிவித்துள்ளார்.

இது மியான்மாரில் நடந்த இராணுவ சதித்திட்டத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *