பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அம்பிகையின் அறப்போர் இன்றுடன் 13 ஆவது நாளை எட்டியுள்ளது.
இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசுக்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா இடமளிக்கக்கூடாது உட்பட நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையாவது பிரித்தானியா நிறைவேற்ற வேண்டுமென நீரை மட்டு அருந்தி தன்னை உருக்கிவரும் அம்பிகையின் உடல் நிலை இரு வாரங்களை அண்மிக்கும் நிலையில் மிகவும் மோசமடைந்துள்ளது.
அம்பிகையின் கோரிக்கைக்கு பதிலளித்து போராட்டத்தை இடைநிறுத்தி அவரை காப்பாற்ற வேண்டிய பிரித்தானிய அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது.
எனினும் பிரித்தானிய அரசியல் மட்டத்தில் தற்போது இப்போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமையை அறிய முடிகின்றது.
இந்நிலையில் அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒவ்வொரு நாழும் நடைபெறும் மெய்நிகர் எழுச்சி நிழகழ்வு வழமைபோல் இன்று பிரித்தானிய நேரம் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மும்மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில்; அரசியல் பிரமுகர்கள்; மற்றும் ஆதரவாளர்களின் சிறப்புரைகளும் எழுச்சி கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.