அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் என்றென்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை.
ஜெயலிதாவின் தொண்டர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
பொது எதிரியான திமுக ஆட்சி அமைக்காது தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடு பட வேண்டும்.
ஜெயலிதாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.
சசிகலாவின் முடிவு குறித்த டி.டி.வி.தினகரன், அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அவரது இந்த முடிவை, பாஜக பொது செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் தலைவர் அழகிரி, அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.