அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 15நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகஜர்

127

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளவிய சிறைகளில் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருக்கும்  அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்களான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், இரா.சம்பந்தன், எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞனம் சிறீதரன், விநோநோகராதலிங்கம், கோ.கருணாகரம், சாணக்கியன் இராசமாணிக்கம் , தவராசா கலையரசன், தர்மலிங்கம் சித்தார்தன், மனோகணேசன், ராதாகிருஸ்ணன் உள்ளிட்டோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *