அரசியல் கைதிகள் உள்ளிட்ட, போர் மற்றும் போராட்டங்களால் சிறைகளுக்கு சென்றவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்க எதிர்ப்பார்த்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தாம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவுடன் கலந்துரையாடல் நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அநுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 8 அரசியல் கைதிகள், இன்று 4வது நாளாகவும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
அதேநேரம் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் சுகவீனமுற்றிருந்த நிலையில், சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.