முக்கிய செய்திகள்

அரசியல் தெரியாத சி.வி.விக்னேஸ்வரனை வடமாகாண முதல்வராக்கியமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் பிழை !

278

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் செல்வாக்கு காணப்படுவதாக அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் தெரியாத சி.வி.விக்னேஸ்வரனை வடமாகாண முதல்வராக்கியமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் பிழை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை 100 சதவீதம் நேர்த்தியாக செய்துள்ளதாகவும், எனினும் வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளாh.
2010 இலும்; 2015 இலும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள சரவணபவன், வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடந்த தேர்தலில் மாற்றுக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியதாக கூறினார்.
எனினும் களத்தில் இருந்த மக்கள் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்கியதாகவும், எதிர்வரும் தேர்தலிலும் இது தொடரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *