முக்கிய செய்திகள்

அரசியல் நலனுக்காக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் கோத்தபாய ராஜபக்ச என சித்தார்த்தன் தெரிவிப்பு

867

தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எத்தனிக்கிறார் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்து சொற்ப காலங்களிலேயே புளொட் அமைப்பிடம் இருக்கும் ஆயுதங்களை கையளிக்குமாறு தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது எனவும், அச்சமயத்தில் தமது அமைப்பு ஆயுதங்களை கையளித்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

போரின் பின்னரான சூழலில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமும் தமக்கு இருக்கவில்லை எனவும், இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிடுவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தமைக்கும் ஆயுதங்களை கையளித்தமைக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவைப் பொறுத்தவரையில் அரசியல் நலன்களுக்காக முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றார் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *